ஆந்திரா என்கவுன்டர்: நக்சலைட்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை


ஆந்திரா என்கவுன்டர்: நக்சலைட்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை
x

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐதராபாத்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது

இந்நிலையில், ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் மரேதுமிலி வனப்பகுதியில் இன்று நடந்த என்கவுன்டரில் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியும் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டம் பூவர்தி கிராமத்தை சேர்ந்த நக்சலைட்டு முக்கிய தளபதி மத்வி ஹிட்பா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் சத்தீஷ்காரில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. என்கவுன்டரில் மத்வி ஹிட்பாவின் மனைவி ராஜுயும் கொல்லப்பட்டுள்ளார் என்று பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story