போலீஸ் என்று கூறி சிறுமியை அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது


போலீஸ் என்று கூறி சிறுமியை அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது
x

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தங்கை, பைக்கில் இருந்து குதித்து உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும், அவரது தங்கையும் நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் செல்வதற்காக டால்டன்கஞ்ச் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 நபர்கள், தங்களை போலீஸ் என கூறிக்கொண்டு சிறுமிகளின் பெயர் மற்றும் விவரங்களை கேட்டுள்ளனர்.

பின்னர் விசாரணை என்ற பெயரில் இரண்டு சிறுமிகளையும் பைக்கில் ஏற்றி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 16 வயது சிறுமியை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதே சமயம், சிறுமியின் தங்கையிடம் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து அந்த 2 சிறுமிகளையும் மீண்டும் பைக்கில் ஏற்றிக்கொண்டு மெத்னிநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தங்கை, செல்லும் வழியில் பைக்கில் இருந்து குதித்து உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பகுதி முழுவதையும் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர் சிறிது நேரத்தில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சோனு குமார் மற்றும் சுமித் குமார் சோனி ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட இருவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story