சத்தீஷ்கார்: துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் உயிரிழப்பு


சத்தீஷ்கார்: துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Oct 2025 5:33 AM IST (Updated: 25 Oct 2025 5:40 AM IST)
t-max-icont-min-icon

துக்க வீட்டில் சாப்பிட்ட பலருக்கு சிறிது நேரத்தில் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ளது துங்கா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் இறந்ததால் இறுதிச் சடங்குகள் நடந்தன. அதன் பின்னர் இறந்தவர் வீட்டில் விருந்து பரிமாறப்பட்டு உள்ளது.

துக்க வீட்டில் சாப்பிட்ட பலருக்கு சிறிது நேரத்தில் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். அவர்களில் ஊர்மிளா என்ற 25 வயது இளம்பெண், தனது 2 மாத குழந்தையுடன் பரிதாபமாக இறந்தார். புதாரி (25), புத்தாராம் (24), லக்கே (45) ஆகியோரும் ஒரு வார இடைவெளிக்குள் அடுத்தடுத்து இறந்தனர்.

1 More update

Next Story