கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் (வயது 101). ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011வரை கேரள முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த அச்சுதானந்தனுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள சட்டசபை தேர்தலில் 10 முறை போட்டியிட்ட அச்சுதானந்தன் 7 முறை வெற்றியும், 3 முறை தோல்வியும் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சுதானந்தனை இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் கோவிந்தன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
Related Tags :
Next Story






