வீடியோ விவகாரம்: கெஜ்ரிவால் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


வீடியோ விவகாரம்: கெஜ்ரிவால் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 15 Jun 2024 2:36 PM IST (Updated: 15 Jun 2024 4:10 PM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு தொடர்பான வீடியோவை நீக்குமாறு கெஜ்ரிவால் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி கெஜ்ரிவால் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோர்ட்டில் அவர் பேசியது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் வைபவ் சிங் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோர்ட்டு விதிகளுக்கு எதிராக இந்த வீடியோவை கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு, நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, நீதிபதி அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை உடனடியாக நீக்குவதுடன், அது தொடர்பாக கோர்ட்டில் சுனிதா விளக்கமளிக்க வேண்டும் என்றும், வேறு யாரேனும் அந்த வீடியோவை மறுபதிவேற்றம் செய்தால், சமூக வலைதள நிறுவனங்கள் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

1 More update

Next Story