‘தொடர்ந்து முன்னேறுவோம்..’ அகமதாபாத் விபத்திற்கு பிறகு ‘ஏர் இந்தியா’ சி.இ.ஓ. முதல் முறையாக பொதுவெளியில் கருத்து


‘தொடர்ந்து முன்னேறுவோம்..’ அகமதாபாத் விபத்திற்கு பிறகு ‘ஏர் இந்தியா’ சி.இ.ஓ. முதல் முறையாக பொதுவெளியில் கருத்து
x

‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் உள்ளார்ந்த நடைமுறைகளை மேம்படுத்துவோம் என கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன் 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இந்த விபத்தை தொடர்ந்து டாடா குழுமத்திற்கு சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் விமானங்கள் மீது அவசரகால உபகரணங்களை சரிபார்க்காமல் விமானங்களை இயக்குவதற்கான எச்சரிக்கைகள், இயந்திர பாகங்களை சரியான நேரத்தில் மாற்றாதது, போலி பதிவுகள், பணியாளர் மேலாண்மை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அகமதாபாத் விபத்திற்கு பிறகு ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சி.இ.ஓ.) கேம்ப்பெல் வில்சன், முதல் முறையாக பொது வெளியில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “தொழில்ரீதியாக இந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் சவாலானது. நாங்கள் விசாரணை அமைப்புகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். நிறுவனத்தின் உள்ளார்ந்த நடைமுறைகளை மேம்படுத்துவோம். தொடர்ந்து முன்னேறுவது குறித்தே நாங்கள் எப்போதும் சிந்தித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story