ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியே தீருவோம்: அமித்ஷா திட்டவட்டம்


ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியே தீருவோம்:  அமித்ஷா திட்டவட்டம்
x

அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து திரியும் ராகுல்காந்தி, அதைத் திறந்து படிக்க வேண்டும் என்று அமித்ஷா சாடியுள்ளார்.

புதுடெல்லி,

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குகளைத் திருடுவதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமித் ஷா கூறியதாவது: "வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் முதல் முறையல்ல; இது நேருவால் தொடங்கப்பட்டது. 2003-ம் ஆண்டும் இது நடந்தது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை ராகுல் காந்தி இப்போதே தேடத் தொடங்கிவிட்டார்.

அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தைச் சுமந்து திரியும் ராகுல் காந்தி, அதைத் திறந்து படிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை. ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா, இல்லையா? ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியே தீருவோம். பீகார் மக்களின் வேலைகளைப் பறிக்கும் வங்கதேசத்தினரைக் காப்பாற்ற ராகுல் காந்தி விரும்புகிறார்," இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story