மேற்கு வங்காளம்: பா.ஜ.க. தலைவராகிறாரா சமிக் பட்டாச்சார்யா? வேட்பு மனு தாக்கல்


மேற்கு வங்காளம்:  பா.ஜ.க. தலைவராகிறாரா சமிக் பட்டாச்சார்யா? வேட்பு மனு தாக்கல்
x

மேற்கு வங்காளத்தின் பா.ஜ.க. தலைவருக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும்படி கட்சியின் தலைமை கூறியது என சமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் பா.ஜ.க. தலைவருக்கான வேட்பு மனுவை அக்கட்சியை சேர்ந்த ராஜ்ய சபை எம்.பி. மற்றும் தலைமை செய்தி தொடர்பாளரான சமிக் பட்டாச்சார்யா இன்று தாக்கல் செய்துள்ளார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இதுபற்றி நான் தற்போது எதுவும் கூறுவதற்கில்லை. அதுபற்றிய முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை. நடைமுறைகள் நடந்து வருகின்றன. கட்சியின் தலைமை என்னை வேட்பு மனு தாக்கல் செய்யும்படி கூறியது. நான் அதனை செய்தேன். முடிவு என்ன என்பது பின்னரே தெரிய வரும் என்றார்.

1 More update

Next Story