

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பரவூர் கடற்கரையில் மீனவர்களின் வலையில் ராட்சத திமிங்கலம் ஒன்று சிக்கியுள்ளது. பின்னர் அந்த திமிங்கலம் கடற்கரையில் ஒதுங்கியது. இருப்பினும் திமிங்கலம் உயிருடன் இருப்பதை அறிந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சேர்ந்து திமிங்கலத்தை கடலுக்குள் தள்ள முயற்சித்தனர்.
இதற்கிடையில் இது தொடர்பாக கடலோர காவல்படை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரமாக அந்த திமிங்கலம் கடற்கரையிலே கிடந்தது. கடல் அலையின் வேகத்தை பயன்படுத்தி அதை கடலுக்குள் தள்ளுவதற்கு முயற்சி செய்தபோதும் அந்த திமிங்கலம் அங்கிருந்து நகராத நிலையில், இறுதியாக படகு மூலம் கயிறு கட்டி இழுக்கப்பட்டு திமிங்கலம் பத்திரமாக கடலுக்குள் விடப்பட்டது.