தவெகவிற்கு பொதுச்சின்னம் கிடைக்குமா? வெளியான புதிய தகவல்


தவெகவிற்கு பொதுச்சின்னம் கிடைக்குமா?  வெளியான புதிய தகவல்
x

ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வருகிறார்.

புதுடெல்லி,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுச் சின்னம் கோரி தவெக அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாகவும், அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, தேர்தல் ஆணைய விதிகளின்படி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே சின்னம் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தவெக கொடுத்துள்ள பொதுவான 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் ஆகிய சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், இதில் ஏதாவது ஒரு சின்னம் ஒதுக்கப்படலாம் என்று தவெகவினர் எதிர்பார்த்து வருகின்றனர்.

1 More update

Next Story