மனைவியின் நிச்சயதார்த்த சேலையை காதலிக்கு பரிசளித்ததால் போலீஸ் நிலையம் படியேறிய புதுமண தம்பதி


மனைவியின் நிச்சயதார்த்த சேலையை காதலிக்கு பரிசளித்ததால் போலீஸ் நிலையம் படியேறிய புதுமண தம்பதி
x
தினத்தந்தி 26 Jan 2026 5:15 AM IST (Updated: 26 Jan 2026 5:15 AM IST)
t-max-icont-min-icon

அம்பரீஷ் திருமணத்துக்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா பனஹள்ளியை சேர்ந்தவர் நந்தினி (வயது 25). இவருக்கும் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த அம்பரீசுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது.

அம்பரீஷ் திருமணத்துக்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் அந்த பெண்ணுடனான தொடர்பை அவர் கைவிடவில்லை. மேலும் தனது மனைவியின் நிச்சயதார்த்த பட்டு சேலையை, அம்பரீஷ் தனது காதலிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதுபற்றி அறிந்த நந்தினி கடும் ஆத்திரமடைந்தார். மேலும், இதுகுறித்து தனது பெற்றோரிடம் நந்தினி கூறியுள்ளார்.

இதையடுத்து நந்தினியின் பெற்றோர், குடும்பத்தினர் உள்பட சிலர் அம்பரீசின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அம்பரீசின் கால் முறிந்தது.

இதுதொடர்பாக அம்பரீசின் தாய் சூர்யா நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story