சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு சிறை

16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை கைது செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காலகுந்தி கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 16 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் திருமணம் செய்திருந்தார். மேலும் பாலியல் பலாத்காரமும் செய்திருந்தார். இதுபற்றி அறிந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சாம்ராஜ்நகர் டவுன் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுமியை திருமணம் செய்த அசோக்(வயது 26) என்ற வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர் மீது சாம்ராஜ்நகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியான அசோக்கிற்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், அவரது பெற்றோர் நிங்கராஜ், கவுரம்மா ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story






