ஓடும் வேனில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: அரியானாவில் கொடூரம்

வேனில் வந்த 2 வாலிபர்கள், இளம் பெண்ணிடம் தாங்கள் அழைத்து செல்வதாக கூறினர். இதை நம்பி வேனில் இளம்பெண் ஏறி சென்றார்.
பரிதாபாத்
அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் இளம் பெண்ணுக்கும் அவரது தாய்க்கும் தகராறு ஏற் பட்டது. இதையடுத்து அந்த இளம் பெண் இரவு தனது தோழி வீட்டுக்கு சென்றார். அப்போது ஒரு வேனில் வந்த 2 வாலிபர்கள், இளம் பெண்ணிடம் தாங்கள் அழைத்து செல்வதாக கூறினர்.
இதை நம்பி வேனில் இளம்பெண் ஏறி சென்றார். அப்போது அவரிடம் வாலிபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். இதைத் தடுத்த அப்பெண்ணை தாக்கினர். பின்னர் ஓடும் வேனில் சுமார் 3 மணி நேரம் இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் குர்கான்–பரிதாபாத் சாலையில் வேனில் இருந்து இளம் பெண்ணை தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இளம் பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு முகம் மற்றும் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இளம் பெண்ணின் உடல் நிலை சீராக இருந்தாலும், அவர் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.






