வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளனர்-ராகுல்காந்தி குற்றச்சாட்டு


வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளனர்-ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 July 2024 6:46 AM IST (Updated: 11 July 2024 2:57 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் மனப்பான்மையால் அவர்களின் எதிர்காலம் முடங்கி உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பொருளாதார மந்தநிலையின் தீய விளைவுகளை ஐ ஐ டி போன்ற மிகவும் கவுரவமான கல்வி நிறுவனங்களே சந்திக்க தொடங்கி உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு, ஐ ஐ டி வளாக ஆள்தேர்வில் 19 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக, அதாவது இருமடங்காக உயர்ந்தது.வேலையின்மையால் இளைஞர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். கல்விக்கு எதிரான பா.ஜனதாவின் மனப்பான்மையால் அவர்களின் எதிர்காலம் முடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story