செயின்ட் ஜோசப் பள்ளி ஆண்டு விழா

திருவாண்டாா்கோவில் செயின்ட் ஜோசப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
திருபுவனை
திருவண்டார்கோவில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 39-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தாளாளர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் மிஸ்டிகன் ஆண்டோ ரிச்சர்ட் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரமேஷ் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ஜானகிராஜா, புதுச்சேரி சேம்பர் ஆப் இண்டஸ்ட்ரி துணை தலைவர் அருள்செல்வம், பள்ளியின் ஓய்வுபெற்ற துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் கடந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியை சத்தியா நன்றி கூறினார்.