மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்


மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்
x

முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளாா்.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை தொகுதி பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகில் உள்ள எம்.எஸ்.அக்ரகாரம் பகுதியில் அறுந்து கிடந்த மின்சார வயரை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்தனர். மேலும் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து பிரகாஷ் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் உறுதியளித்தார். மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்வயர்களை உடனடியாக மாற்றி புதைவட மின் கம்பிகள் அமைக்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சரிடம் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.


Next Story