10 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கியது


10 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கியது
x

கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து 10 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடர்ந்து நடக்கிகிறது

புதுச்சேரி

கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து 10 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டிகள் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வரை கேப்- சீகெம் மைதானம் 3-ல் நடைபெறுகிறது.

இந்தபோட்டியில் அவென்ஜ்ர்ஸ், ஈகிள்ஸ், கிங்ஸ், பேட்டிரியாட்ஸ், ராயல்ஸ், ஸ்மாஷ்ர்ஸ், டைட்டன்ஸ், வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று காலை நடைபெற்ற தொடக்க விழாவில் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி கவுரவ செயலாளர் சந்திரன், கேப் நிறுவனர் தாமோதரன் ஆகியோர் வீரர்களிடம் கைகுலுக்கி, பேர்டிகளை தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய கவுரவ செயலாளர் சந்திரன், 'இது போன்ற போட்டி தொடர்கள் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதனை நன்றாக பயன்படுத்தி வீரர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

தினமும் 3 போட்டிகள் வீதம் மொத்தம் 57 போட்டிகள் நடைபெற உள்ளது. பைஜூஸ் நிறுவனம் வழங்கும் இந்த போட்டிகள், பேன்கோடு ஆப்-ல் நேரலையாக ஒளிபரப்பாகிறது.

1 More update

Next Story