100 அடி சாலை மேம்பாலத்தில் மீண்டும் பள்ளம்


100 அடி சாலை மேம்பாலத்தில் மீண்டும் பள்ளம்
x

புதுவை 100 அடி சாலை மேம்பாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்ப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மூலக்குளம்

புதுச்சேரி 100 அடி சாலையில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் மேல் பகுதியில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுவதும், அவை சீரமைக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் பாலத்தின் நடுப்பகுதியில் சிமெண்டு கான்கிரீட் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே பயணம் செய்து வருகின்றனர். விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு அந்த பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story