108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்


108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்
x

விபத்து பகுதிக்கு விரைந்து செல்லும் வகையில் 108 ஆம்புலன்ஸ் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால்,

விபத்து பகுதிக்கு விரைந்து செல்லும் வகையில் 108 ஆம்புலன்ஸ் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

காரைக்கால் மாவட்டத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சாலை பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் துணை கலெக்டர் பாஸ்கரன், வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு நித்தின் கவுகால் ரமேஷ், நகராட்சி ஆணையர் செந்தில்நாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிதம்பரநாதன், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆம்புலன்ஸ்கள் தயார்...

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் பேசியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் இடங்களை போக்குவரத்து போலீசார் கண்டறிய வேண்டும். மேலும் காரைக்காலில் குறுக்கு சாலைகளில் விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.

காரைக்காலில் விபத்துகளை குறைக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் சாலைகளை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக காரைக்காலில் விபத்துகள் நடைபெறும்போது ஆம்புலன்ஸ்கள் காலதாமதமாக செல்வதாக புகார்கள் வந்துள்ளன. அதை இனி தவிர்க்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story