லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

பாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்

பாகூர் கிருஷ்ணாநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் 3 எண் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு, 2 பேர் லாட்டரி முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாகூர் பங்களா தெருவை சேர்ந்த சரவணன் (வயது 42), தண்டபாணி (42) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.32,250 ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story