லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

புதுச்சேரியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி கொசக்கடை வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது லாட்டரி விற்பனை செய்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் மரக்காணத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது29), சுப்பிரமணி (51) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள், 3 செல்போன்கள் மற்றும் ரூ.17 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story