லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

வில்லியனூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் கோட்டைமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த ஜெயராமன் (55), விழுப்புரத்தை சேர்ந்த கோவிந்தசாமி (43) என்பதும், அவர்கள் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் 12,000 ரொக்க பணம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story