லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

புதுச்சேரியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாதா கோவில் அருகே 2 பேர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கணுவாப்பேட்டையை சேர்ந்த அந்தோணி (வயது 70), வில்லியனூரை சேர்ந்த கண்ணன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story