கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது


கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
x

லாஸ்பேட்டையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

லாஸ்பேட்டை பாரதி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப் படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டவுடன் அங்கிருந்த 4 பேர் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், பாரதி நகரை சேர்ந்த கல்லூரி மாணவன் கோகுல் (வயது20), சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த டிரைவர் வேணுகோபால் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ 117 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய விக்கி, முகேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story