கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x

காரைக்காலில் கஞ்சா விற்ற 2 வாலிபரைகளை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ராயன்பாளையம் பகுதிகளில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 2 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் 2 பேரும் ராயன்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த சதீஷ் (வயது 22), அரவிந்த் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிராம் எடை கொண்ட 7 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story