கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x

திருப்பட்டினத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் போலகம் பகுதியில் பிப்டிக் மையம் உள்ளது. இங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே திரு-பட்டினம் போலீசார் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையில் அங்கு சென்றனர்.

அப்போது 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.

விசாரணையில் அவர்கள் காரைக்கால் மதகடி பகுதியை சேர்ந்த ராமானுஜன் (வயது 39), திருநள்ளாறு பேட்டை பகுதியை சேர்ந்த விவேக் (28) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 80 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story