மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது


மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது
x

புதுவையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி

உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் இன்று காலை புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 86 குவாட்டர் பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள், புதுச்சேரி குறிஞ்சி நகரை சேர்ந்த சிவக்குமார் (வயது 31), செயின்ட் பால் பேட் பகுதியை சேர்ந்த மரியநாதன் (34) என்பதும், புதுவையில் இருந்து திருச்சிக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 160 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் மதுபாட்டில்களுடன் கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.


Next Story