புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x

காரைக்கால் பகுதியில் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி ஹேவெய்ஸ் நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நிரவி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது வீட்டில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக புகையிலை பொருட்கள் வியாபாரி ரவி (வயது 47) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட காரைக்கால் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (27), நிரவி கீர்த்திகா நகரை சேர்ந்த சூர்யா (26) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story