கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

நெட்டப்பாக்கம் அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கத்தை அடுத்த மடுகரை அரசு உயர்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே மடுகரை புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களையும் கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் அகரம் காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்த குணால் (வயது 21), மடுகரை ராம்ஜி நகர் பால்வாடி தெருவை சேர்ந்த அன்பு (21), அதே பகுதியை சேர்ந்த சந்துரு (21) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து குணால், அன்பு, சந்துரு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 360 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story






