கலை, அறிவியல் படிப்புகளுக்கு 3-வது சுற்று இடங்கள் ஒதுக்கீடு


கலை, அறிவியல் படிப்புகளுக்கு 3-வது சுற்று இடங்கள் ஒதுக்கீடு
x

கலை, அறிவியல் படிப்புகளுக்கு 3-வது சுற்று இடங்கள் ஒதுக்கீடு சென்டாக் வெளியிட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுச்சேரியில் நீட் அல்லாத கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான 3-வது சுற்று இடங்கள் ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையின் போது, இருப்பிடம், சாதி மற்றும் பிற அசல் சான்றிதழ்கள் தொடர்பான ஆவணங்களை சரிபார்ப்பதற்கு உட்பட்டதாகும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் பயனாளர் ஐ.டி.யில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணி முதல் இடம் ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து, வருகிற 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட கல்லூரியில் சமர்ப்பித்து சேரலாம். முதல், 2-வது சுற்றுகளில் இடம் ஒதுக்கப்பட்டு கல்லூரி சேர்ந்தவர்களுக்கு 3-வது சுற்று கலந்தாய்வு மூலம் புதிதாக சீட் ஒதுக்கப்பட்டால், ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடம் தானாக ரத்தாகி விடும்

அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story