கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

கிருமாம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்
கிருமாம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவ கல்லூரி அருகில் உள்ள பின்னாச்சிகுப்பம் சாலை ஓரத்தில் உள்ள கடை அருகே ஒரு கும்பல் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிவதாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் லூர்து நாதன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றபோது சிலர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி பிடித்து விசாரித்தபோது, கஞ்சா பொட்டலங்கள் வைத்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள் கடலூர் திருபாதிரிபுலியூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரவுடி முனிசாமி (வயது 20), அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (20), புதுச்சேரி நெல்லித்தோப்பு விக்ரமன் (25), கிருமாம் பாக்கம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த அகஸ்டின் (26) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 பாக்கெட்டுகள் கொண்ட 300 கிராம் கஞ்சா மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப் பட்டது. இதன் மதிப்பு ரூ. 10 ஆயிரம் ஆகும்.