4 வழிச்சாலை பணிக்காக அகற்றப்பட்ட பெயர் பலகைகள்


4 வழிச்சாலை பணிக்காக அகற்றப்பட்ட பெயர் பலகைகள்
x

திருபுவனை

புதுச்சேரி-விழுப்புரம் இடையே சாலையோரத்தில் இருந்த கட்டிடங்கள், கடைகள், மரங்கள் அகற்றப்பட்டு 4 வழிச்சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அந்த பகுதியில் இருந்த ஊரின் பெயர் பலகைகள் அகற்றப்பட்ட நிலையில் புதிய பெயர் பலகைகள் வைக்கப்படவில்லை. இதனால் பஸ் நிறுத்தம் தெரியாமல் வேறு இடத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் பயணிகள் பரிதவிக்கின்றனர்.திருபுவனை, கண்டமங்கலம் பகுதியில் சாலை அமைக்கும் பணியால் ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் சென்று வருவதால் காலை, மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டால் மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருக்கின்றன. பொதுமக்களின் நலன்கருதி புதுச்சேரி-விழுப்புரம் இடையே புதிதாக பெயர் பலகை வைக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசாரை நியமித்து கண்காணிக்கவும், தனியார் பஸ்களை முறையாக இயக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.


Next Story