போலீசார் மீது கல்வீசிய 5 பேர் கைது


போலீசார் மீது கல்வீசிய 5 பேர் கைது
x

நெட்டப்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதலில் போலீசார் மீது கல்வீசிய 5 பேரை போலீசார் செய்தனர்.

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்ய சென்ற போலீசார் மீதும், வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நெட்டப்பாக்கம் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் ஒரு தரப்பை சேர்ந்த பெரியாண்டவர், பவானி சங்கர் மற்றும் மற்றொரு தரப்பை சேர்ந்த நரேந்திரன், பாரதிராஜா, கதிரவன் என்ற விஜயராகபாகரன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story