உடல் தகுதி தேர்வில் 647 பேர் பங்கேற்பு


உடல் தகுதி தேர்வில் 647 பேர் பங்கேற்பு
x

புதுவை காவல்துறையில் போலீஸ் வேலைக்காக உடல் தகுதி தேர்வுக்கு இன்று 647 பேர் பங்கேற்றனர்.

புதுச்சேரி

புதுவை காவல்துறையில் 253 போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த உடல்தகுதி தேர்வில் கலந்துகொள்ள 1,000 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 647 பேர் தான் உடல்தகுதி தேர்வில் கலந்துகொண்டனர். இதில் 195 பேர் தேர்வு செய்யப்பட்டு, அடுத்தக்கட்டமாக எழுத்து தேர்வு தகுதி பெற்றனர்.


Next Story