8 பறக்கும் படைகள் அதிரடி சோதனை


8 பறக்கும் படைகள் அதிரடி சோதனை
x

காரைக்காலில் யு.டி.சி. தேர்வு நடந்த 13 மையங்களில் :8 பறக்கும் படைகள் அதிரடி சோதனை நடத்தினர்.

காரைக்கால்

புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் 116 மேல்நிலை எழுத்தர் (யு.டி.சி.) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு காரைக்காலில் 13 மையங்களில் இன்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பகல் 12 மணிக்கு முடிவடைந்தது. காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 148 பேர் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் 4 ஆயிரத்து 177 பேர் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். இதில் ஆண்கள் 1,942 பேரும், பெண்கள் 2 ஆயிரத்து 235 பேரும் அடங்குவர். தேர்வு எழுதியவர்கள் 81.14 சதவீதம் ஆகும்.

தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பஸ்வசதி செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் எந்த முறைகேடும் நடைபெறாமல் இருப்பதற்காக 8 பறக்கும் படைகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.

1 More update

Next Story