புதிதாக 88 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 88 பேருக்கு கொரோனா தொற்று
x

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் 57 பேர் குணமடைந்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் 57 பேர் குணமடைந்தனர்.

88 பேருக்கு கொரோனா

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 840 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 88 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

புதுச்சேரியில் 62 பேரும், காரைக்காலில் 23 பேரும், ஏனாமில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 57 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 23 பேரும், வீடுகளில் 509 பேரும் என 532 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் தொற்று பரவல் 10.48 சதவீதமாகவும், குணமடைவது 98.58 சதவீதமாகவும் உள்ளது.

முகக்கவசம் கட்டாயம்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங் களுக்கு செல்ல வேண்டாம். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


Next Story