9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை


9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை
x

மூலக்குளத்தில் 9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் புதுச்சேரி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அவர்களை ஊருக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட காந்திதிருநல்லூரை சேர்ந்த அய்யப்பன், ஜீவா, ஜோசப், முத்திரையர்பாளையத்தை சேர்ந்த சசிகுமார், நந்தகுமார், காக்கா விஜி, குரும்பாம்பேட்டை சேர்ந்த இளவரசன், முத்து மற்றும் முத்துக்குமார் ஆகிய 9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.


Next Story