சிலை அமைக்க பீடம் அமைத்தவர்கள் மீது வழக்கு


சிலை அமைக்க பீடம் அமைத்தவர்கள் மீது வழக்கு
x

திருபவனையில் அனுமதியின்றி சிலை அமைக்க பீடம் அமைத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருபுவனை

திருபுவனை பெரியபேட்டில் உள்ள வி.டி.சி தெருவில் புதிதாக சிலை அமைக்கவும், அதற்கான பீடம் அமைக்கவும் கட்டிடப் பணியை அப்பகுதியை சேர்ந்த சிலர் தொடங்கி உள்ளனர். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த கால்வாயை அகற்றி கம்பிகள் கட்டி பீடம் அமைப்பதற்கான வேலை நடைபெற்றுள்ளது. அதை அறிந்த மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், அது குறித்து திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அனுமதியின்றி சிலை அமைக்க பீடம் அமைத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story