2 பெண்டாட்டிக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


2 பெண்டாட்டிக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வில்லியனூர் அருகே 2 பெண்டாட்டிக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே 2 பெண்டாட்டிக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

2-வது திருமணம்

வில்லியனூர் அருகே வடமங்கலத்தை சேர்ந்த சரவணன் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவருக்கும், ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வாணிஸ்ரீ (23) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

வாணிஸ்ரீ மங்கலம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் வாணிஸ்ரீயை சரவணன், தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கம்பெனியில் விடுவது வழக்கம்.

அப்போது வாணிஸ்ரீயுடன் வேலை செய்த கடலூரை சேர்ந்த ஏற்கனவே திருமணமான கலையரசி என்ற பெண்ணுடன் சரவணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை சரவணன் 2-வதாக திருமணம் செய்து கொண்டு தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் வாணிஸ்ரீ, சரவணன், கலையரசி ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த சரவணன் நேற்று மாலை வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த வில்லியனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story