சுண்ணாம்பாறு படகு குழாமில் பெயர் பலகை வைக்கப்பட்டது

புதுவையின் சுண்ணாம்பாறு படகு குழாமில் ‘பெரிய எந்திர படகுகள் இயங்காது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அரியாங்குப்பம்
புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கு பல்வேறு வகையான படகுகள் உள்ளன. அவற்றில் பெரிய எந்திர படகுகள் பழுதாகி கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் படகு சவாரி ஏமாற்றத்தை தவிர்க்க நிர்வாகம் தரப்பில், 'பெரிய எந்திர படகுகள் என்ஜின் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இயங்காது' என்ற அறிவிப்பு பலகை நுழைவு வாயிலில் வைக்கப்பட்டது. வார இறுதி விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வார்கள். நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்கும் எந்திரப்படகுகளை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story