மாநிலத்தை வெறுமையாக்கும் புதிய மாடல்


மாநிலத்தை வெறுமையாக்கும் புதிய மாடல்
x

புதுவை மாநிலத்தை வெறுமையாக்கும் புதிய மாடல் என முன்னாள் எம்.பி. ராமதாஸ் விமர்ச்சித்துள்ளார்.

புதுச்சேரி

புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலைக்கு மூடுவிழா நடத்துவதற்காக முதல்-அமைச்சர் காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. இலவசத்தின் மூலமே மக்களை திருப்திபடுத்தி அவர்களை ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்தி இந்த மாநிலத்தை வெறுமையாக்கும் ஒரு புதிய மாடலை முதல்-அமைச்சர் உருவாக்கி வருகிறார். ஸ்பின்கோவுக்கு கூட்டுறவு தத்துவத்தின்படி தேர்தல்களை நடத்தி நிர்வாக குழுவை அமைக்காமல் அரசு இந்த நிறுவனத்துக்கு அவ்வப்போது நிர்வாக திறமையில்லாதவர்களை நிர்வாகிகளை நியமித்ததுதான் மில் நலிவடைந்ததற்கு முக்கிய காரணம்.

தொழிலாளர்கள் கூடுதல் வேலைப்பளுவையும் ஏற்றுக்கொண்டு தங்கள் உழைப்பில் இந்த ஆலையை நடத்தி வந்தனர். பஞ்சு விலை உயர்ந்தபோது லே ஆப் கொடுத்த அரசு அதன் விலை குறைந்த உடன் ஆலையை திறந்து இருக்கலாமே? புதுவையில் எங்காவது பஞ்சு தயாரிக்கும் நிலையில் 60 ஏக்கர் நிலத்தில் பஞ்சு உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்தால் இந்த ஆலைக்கு தேவையான 120 டன் பஞ்சு இலவசமாக கிடைக்கும்.

தொழில்நுட்பம் நிறைந்த என்ஜினீயர்களை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். இதை செய்தால் 6 மாதங்களில் இந்த ஆலை லாபம் கொழிக்கும் ஒரு நிறுவனமாக மாற்றப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story