ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும்


ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும்
x

வயதான காலத்தில் வாழ்வாதாரமின்றி தவித்து வருபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி

நாடாளுமன்றத்தில் வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தி பேசியதாவது:-

வருங்கால வைப்புநிதி ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பயன்பெறும் ஓய்வூதியதாரர்கள் சுமார் 70 லட்சத்துக்கும் மேல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிகவும் குறைவானது ஆகும். சராசரியாக இந்த திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1,171 ஆகும். இவர்களுக்கு மருத்துவ செலவுகளுக்காக எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை.

இதனால் வயதான காலத்தில் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இலவச மருத்துவத்தை வழங்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த தகவல் வைத்திலிங்கம் எம்.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story