அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் சாவு


அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் சாவு
x

புதுவை ஆலங்குப்பம் காமராஜ் வீதியில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் சாவு

பதுச்சேரி

புதுவை ஆலங்குப்பம் காமராஜ் வீதியை சேர்ந்தவர் விஜயன் (வயது47). சிமெண்டு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் மனைவி இறந்ததால் மன உளைச்சலில் இருந்த விஜயன் மதுபழக்கத்திற்கு அடிமையானார். சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வாசலில் உறங்கினார். சிறிது நேரம் கழித்து அவரை, மகள் எழுப்பியபோது பேச்சுமூச்சின்றி கிடந்தார். உடனே உறவினர்கள் உதவியுடன் அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்


Next Story