இருதய சிகிச்சைக்கான அதிநவீன ஆய்வுக்கூடம்

வில்லியனூர் அருகே அகரத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரியில் இருதய சிகிச்சைக்கான அதிநவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே அகரத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நகர்புறத்துக்கு இணையாக பல்வேறு நோய்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மருத்துவமனையில் இருதய சிகிச்சையை மேம்படுத்தும் வகையில் ரூ.10 கோடி செலவில் அதிநவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி சேர்மன் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அதிநவீன ஆய்வகத்தை முதல்- அமைச்சர் ரங்கசாமி திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், வைத்திலிங்கம் எம்.பி., எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. செந்தில்குமார், சம்பத் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், லட்சுமிநாராயணா மருத்துவ கல்லூரி வேந்தர் டாக்டர் சந்தீப் ஆனந்த், கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி, துணை முதல்வர் பாலகுருநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் போஸ்கோ மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.