சுருக்கெழுத்தர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சந்திப்பு


சுருக்கெழுத்தர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சந்திப்பு
x

புதுவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்தர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதுச்சேரி

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 35 சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டு, கடந்த 10-ந்தேதி 31 பேரை கொண்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்து, பணியில் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தினார்.


Next Story