வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்தால் நடவடிக்கை


வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்தால் நடவடிக்கை
x

புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதன் காரணமாகவும், போக்குவரத்து இடையூறை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டுமான பணி மேற்கொள்பவர்கள் கட்டுமான பொருட்களை வடிகால் வாய்க்காலில் கொட்டி ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. அப்படி கொட்டியிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகமே நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி கட்டுமான பொருட்கள் 'ஜப்தி' செய்யப்படும். மேலும் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story