ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை


ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை
x

ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர்- பழங்குடியின மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெற தகுதியான மாணவ, மாணவிகள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் பொதுசேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான அனைத்து ஆவணங்களையும் மென் நகல்களாக பதிவேற்றம் செய்யவேண்டும். விண்ணப்பத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது தேசிய கல்வி உதவித்தொகை வலைதளம் மூலம் மாணவர்களின் செல்போனுக்கு தகவல்களாக அனுப்பப்படும்.

நிராகரிப்பை தவிர்க்க...

அந்த குறைபாடுகளை மாணவர்கள் உடனுக்குடன் சரிசெய்து விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதை தவிர்க்கவேண்டும். மேலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண் சம்பந்தமான தகவல்களை விண்ணப்பத்தில் அளிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னணு மூலமாக சரிபார்க்கப்பட்டு உரிய காலத்துக்குள் இத்துறைக்கு மேல் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மேலும் மாநில அரசின் திட்டமான முழு கல்வி கட்டணத்தையும் அரசே வழங்கும் திட்டத்தின்கீழ் (கல்விக் கட்டணக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும்) பூர்வீக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் தங்களது ஆதார், சாதி சான்றிதழ் நகல்கள் மற்றும் பெற்றோர், பாதுகாவலர் உறுதிமொழி அசல் போன்றவற்றை பள்ளி மற்றும் கல்லூரிகளில் உரிய நேரத்திற்குள் சமர்ப்பித்து 2022-23-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டங்களில் பயனடையுமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story