8 ஆண்டுகளாக மூடி கிடக்கும் வேளாண் நர்சரி


8 ஆண்டுகளாக மூடி கிடக்கும் வேளாண் நர்சரி
x

காரைக்காலில் 8 ஆண்டுகளாக மூடி கிடக்கும் வேளாண் நர்சரியை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டுச்சேரி

காரைக்காலில் 8 ஆண்டுகளாக மூடி கிடக்கும் வேளாண் நர்சரியை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண் நர்சரி

காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் கடந்த 2016-ம் ஆண்டு வேளாண்துறை மூலம் நர்சரி தொடங்கப்பட்டது. வாரச்சந்தையை ஒட்டி இருந்த நகராட்சி திடலில் இந்த நர்சரிக்கான அரங்கு அமைக்கப்பட்டது. காய், கனி, மலர் செடிகள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டன.

செடிகள் காய்ந்து விடாமல் இருக்க பல லட்சம் ரூபாய் செலவில் பசுமைக் கூடாரமும் அமைக்கப்பட்டது. முகப்பில் விற்பனை நிலையமும் உருவாக்கப்பட்டது. வேளாண்துறையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட காய், கனி, மலர் செடி விற்பனை நிலையமாகவே இது இயங்கி வந்தது. செடிகளை விற்கவும், பராமரிக்கவும் வேளாண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

சீரமைத்து திறக்கப்படுமா?

இங்கு மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நார்த்தை, தென்னை, வாழை மற்றும் காய்கறி செடிகளும் விற்பனை செய்யப்பட்டன. ரோஜா, மல்லிகை, செம்பருத்தி உள்ளிட்ட மலர்ச்செடிகளும் விற்கப்பட்டன. விவசாயிகள், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த நர்சரி காலப்போக்கில் சரிவர பராமரிக்கவில்லை. இதனால் செடிகள் கருகி பொட்டல் காடாக காட்சியளிக்கிறது. பசுமை கூடாரமும் சேதமடைந்து மோசமானது.

ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் தற்போது அது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சிலர் அந்த இடத்தை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். எனவே 8 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நர்சரியை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story