போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்


போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
x

எல்லைப்பிள்ளைச்சாவடியில் ஆம்புலன்ஸ் போக்குவரத்து செரிசலில் சிக்கியது.

புதுச்சேரி

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர். இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் புதுச்சேரி நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இந்தநிலையில் நேற்று இரவு புதுவை எல்லைப்பிள்ளைச்சாவடி பள்ளி கல்வித்துறை அலுவலகம் எதிரே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கிக் கொண்டது. போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால் ஆம்புலன்சுக்கு வழி கொடுக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் போக்குவரத்து நெரிசல் சரியானதால் ஆம்புலன்ஸ் உடனடியாக சென்றது.

1 More update

Next Story