சிகிச்சைக்காக ஆட்டோவில் சென்ற மூதாட்டி, கார் மோதி பலி


சிகிச்சைக்காக ஆட்டோவில் சென்ற மூதாட்டி, கார் மோதி பலி
x

புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்ட மூதாட்டி, கார் மோதிய விபத்தில் பலியானார். டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்ட மூதாட்டி, கார் மோதிய விபத்தில் பலியானார். டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிகிச்சைக்கு ஆட்டோவில் சென்றார்

புதுச்சேரி இளங்கோ நகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பிரசன்னகுமாரி (வயது 62). இவரது மகன் விஜய்லால் (43). இன்று அதிகாலை பிரசன்னகுமாரிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே விஜய்லால், தாயார் பிரசன்னகுமாரியை ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆட்டோவை டிரைவர் மணிமாறன் ஓட்டினார்.

புதுவை நேரு வீதி-மிஷன் வீதி சந்திப்பில் சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த பிரசன்னகுமாரி, விஜய்லால் மற்றும் டிரைவர் மணிமாறன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

மூதாட்டி பலி

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பிரசன்னகுமாரி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த விஜய்லால், மணிமாறன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story